ஐஎஸ்ஐஎஸ் புலனாய்வுத் தலைவர் பலி..! போட்டுத் தள்ளியது ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பு..!

2 August 2020, 8:22 pm
ISIS_UpdateNews360
Quick Share

ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் புலனாய்வுத் தலைவராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அசாதுல்லா ஓராக்ஸாய், ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்.டி.எஸ்) நடத்திய தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார்.

“என்.டி.எஸ்ஸின் சிறப்பு பிரிவுகள் பாகிஸ்தானின் அகெல் ஓராக்ஸாய் ஏஜென்சியின் கீழ் செயல்படும் அசாதுல்லா ஓராக்சாய் என அழைக்கப்படும் ஜியாவுர் ரஹ்மானை இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கையின் போது தீர்த்துக் கட்டப்பட்டுள்ளார்.” என்று அந்த நிறுவனம் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல இராணுவ மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ஓராக்ஸாய் ஈடுபட்டதாக என்.டி.எஸ். தெரிவித்துள்ளது.

“ஆப்கானிஸ்தானின் பிராந்திய மற்றும் சர்வதேச நட்பு நாடுகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஒரு முக்கிய பங்கு வகிப்பவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பயங்கரவாதிகளின் வேர்களை முழுமையாக நசுக்கும்” என்று என்டிஎஸ் கூறியது.

முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் கோரசன் மார்ச் 25 காபூல் குருத்வாரா தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தது 25 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 4’ம் தேதி, என்.டி.எஸ் சிறப்பு பிரிவுகளின் நடவடிக்கையின் போது, ஐஎஸ்ஐஎஸ் கோரசன் கிளையின் தலைவரான அஸ்லம் ஃபாரூகி மற்றும் அஸ் தலஹா என அழைக்கப்படும் கரி ஜாஹித் மற்றும் சைபுல்லா உட்பட 19 ஐ.எஸ் உறுப்பினர்களை கைது செய்ததாக என்.டி.எஸ். தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் சித்திரவதைக்குள்ளான சுமார் 700 சீக்கியர்களை மீண்டும் அழைத்து வர இந்தியா தயாராகி வருகிறது. சீக்கியர்களின் முதல் குழு ஏற்கனவே ஜூலை 26 அன்று இந்தியாவில் தரையிறங்கியது.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஹக்கானி நெட்வொர்க்குடன் இணைந்த போராளி குழுக்களால் கடத்தப்பட்ட நிடன் சிங் சச்ச்தேவாவும் இந்த குழுவுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.