இரண்டாக உடையும் ஆப்ரிக்க கண்டம்… காஷ்மீர் போல குளிர்பிரதேசமாக மாறும் கேரளா, கர்நாடகா.. அதிர்ச்சி தகவல்!

Author: Babu Lakshmanan
22 April 2024, 6:28 pm
Quick Share

ஆப்ரிக்க கண்டனம் இரண்டாக பிரியப் போவதாக அறிவியலாளர்கள் கூறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலக நாடுகளால் தடுக்க முடியாத ஒன்றாக பருவநிலை மாற்றம் இருந்து வருகிறது. இதன் விளைவால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் துபாயில் பெய்த கனமழையும் ஒரு உதாரணமாகும்.

இந்த நிலையில், தற்போது இருக்கும் ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதாவது, ஸாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகள் பிரிந்து , அவற்றிற்கு இடையே கடல் பகுதிகள் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு நில அடுக்கு இரண்டாக அல்லது மூன்றாக பிரிவதை ரிப்ட் என்று அழைப்பார்கள். தற்போது கிழக்கு ஆப்ரிக்காவில் ரிப்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது, 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்துள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்திலும் நில பிரிவு ஏற்பட்டிருப்பதால், இன்னும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும் என்கின்றனர்.

மேலும் படிக்க: 3 ஆண்டுகள் கோட்டை விட்டாச்சு.. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல ; திமுக அரசுக்கு மீது அண்ணாமலை பாய்ச்சல்!!

மேலும், ஆப்ரிக்க கண்டத்தில் ஏற்பட்ட இந்த பிளவு இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்களில் எதிரொலிக்குமாம். இந்த நில பிரிவுனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் குளிர் பிரதேசங்களாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீர் போல மாறி விடுமாம். ஆனால், இந்த மாற்றம் நிகழ லட்ச வருடங்கள் ஆகும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

Views: - 229

0

0

Leave a Reply