ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழந்த சோகம்…!!

By: Aarthi
12 October 2020, 11:33 am
africa - updatenews360
Quick Share

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

மாஸ்கோ: ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளை நோக்கி அகதிகளாக புலம்பெயர்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த போதிலும், பலர் அதனை கவனத்தில் கொள்வதில்லை.

இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் இருந்தவர்களில் பலர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் இதுவரை மீட்டுள்ளனர். இது தவிர 7 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Views: - 28

0

0