விரைவில் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் கஞ்சா..! உபெர் டாக்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

13 April 2021, 8:27 pm
Cannabis_Door_Delivery_Uber_USA_UPdateNews360
Quick Share

வீட்டு வாசலுக்கே வந்து மது சப்ளை செய்யும் சேவையைத் தொடங்கிய பிறகு, உபெர் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிவிப்பில் விரைவில் உபெர் நிறுவனம் கஞ்சா அல்லது மரிஜுவானா போன்ற போதைப்பொருட்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யும் சேவையை தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சேவை அமெரிக்காவில் மட்டும் தான் கிடைக்கும்.

அமெரிக்க கூட்டாட்சி கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி வழங்கிய உடன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை டோர் டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்குவோம் என்று உபெர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். நேற்று அமெரிக்காவில் நடந்த ‘டெக் செக்’ நிகழ்ச்சியின் போது கோஸ்ரோஷாஹி இதைக் கூறினார்.

அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின் கீழ் மரிஜுவானா இன்னும் சட்டவிரோதமாக உள்ளது. ஆனால் சில சட்டமியற்றுபவர்கள் கொள்கையை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இன்றுவரை, 16 மாநிலங்கள், கொலம்பியா மாவட்டத்துடன் சேர்ந்து, பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான சமீபத்திய மாநிலமாக நியூயார்க் உள்ளது. அங்கு மரிஜுவானா தயாரிப்புகளை மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, கலிபோர்னியா, நெவாடா மற்றும் ஓரிகான் ஆகிய மாகாணங்களில் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சா விநியோக சேவைகள் தற்போது எந்த தடையும் இல்லாமல் கிடைக்கின்றன.

முன்னதாக, மதுபானத்தை டோர் டெலிவரி செய்யும் சேவையை அமெரிக்காவில் தொடங்க, கடந்த பிப்ரவரியில் உபெர் நிறுவனம் 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் ஆல்கஹால் விநியோக சேவையான டிரிஸ்லியை வாங்கியது.

டிரிஸ்லியின் சந்தை இறுதியில் உபெர் ஈட்ஸ் பயன்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்படும். 1,400 க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கும் டிரிஸ்லி அமெரிக்காவின் முன்னணி மதுபான சப்ளை நிறுவனமாகும்.

Views: - 27

0

0