பாகிஸ்தானில் ஏலியன்ஸ்? வானில் தோன்றிய பறக்கும் தட்டு!!

29 January 2021, 10:59 am
Quick Share

பாகிஸ்தானில் விமானத்தின் பைலட் ஒருவர், வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்றை கண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அது பறக்கும் தட்டு தான் எனவும், ஏலியன்கள் நடமாட்டம் எனவும் நெட்டிசன்கள் பீதி கிளப்பி வருகின்றனர்.

பாகிஸ்தான் விமானம் ஒன்று, முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையே பறந்த போது, அந்த விமானத்தின் பைலட், வானில் ஒரு பொருள் சுற்றிக் கொண்டிருப்பதை கண்டார். இந்த அசாதாரண நிகழ்வை பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. அது பிற கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு எனவும் வதந்தி பரவியது.

இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது: ஏர்பஸ் ஏ -320 விமானத்தை இயக்கிய பைலட் தனது விமானத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்திலும், தரையில் இருந்து 35 ஆயிரம் அடி உயரத்திலும் ஒரு பொருள் பறந்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்துள்ளார். அவர் பார்த்தது என்ன என்பதை ஆராயாமல் கூற முடியாது. இதுகுறித்து அவர் அறிக்கையும் அளித்துள்ளார். அது பறக்கும் தட்டாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாலை 4.30 மணியளவில், சூரிய ஒளிக்கு மத்தியிலும், பிரகாசமாக தெரிந்த அந்த பொருளை கண்டு வாய் பிளந்துள்ள நெட்டிசன்கள், இது பறக்கும் தட்டு தான் எனவும், பாகிஸ்தானில் ஏலியன்கள் நடமாட்டம் இருக்கிறது எனவும் விவாதித்து வருகின்றனர்.

Views: - 30

0

0