விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 2 பேர் பலி, 14 பேர் படுகாயம்..!

19 September 2020, 4:47 pm
New_York_ gun shoot - updatenews360
Quick Share

விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் ரேசெல்டர் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத போது, மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதைக் கண்ட மற்றும் துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்ட மக்கள், நாலாபுறமும் சிதறி அலறியடித்து ஓடினர். இருப்பினும், இதில் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், 2 பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்தவர்களை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில், எத்தனை பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றியும் தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.