மருமகனின் பிறந்த நாளுக்காக இந்திய உணவு வகைகளை செய்து அசத்திய அமெரிக்க சமையல் கலைஞர்

7 March 2021, 4:51 pm
Quick Share

மருமகன் கெவின் சுல்லிவனின் பிறந்த நாளையொட்டி, அமெரிக்காவின் முன்னணி சமையல் கலைஞரும், முன்னணி ஹோட்டல் தொழிலதிபருமான ரிக் பேலேஸ், இந்திய உணவு வகைகளை சமைக்கும் வீடியோ, இணையவெளியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

ரிக் பேலெஸ் செய்த இந்திய உணவு வகைகளில், பராத்தா, சன்னா மசாலா, பட்டர் சிக்கன், ஷாக் பனீர், இதனுடன் டெவில்ஸ் புட் கேக், உப்பு சேர்க்கப்பட்ட முந்திரி பட்டர் கிரீம் மிக முக்கியமானதாக இருந்தன. இந்த உணவு வகைகளின் போட்டோக்களை, ரிக் பேலெஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பட்டர் சிக்கன் மற்றும் பிறந்த நாள் கேக், பார்ப்பவர்களின் வாயில் எச்சில் ஊறவைக்கும்படி இருந்தது.

ரிக் பேலெஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் என்பதால், அவர் தயாரிக்கும் உணவு வகைகளில் சுவைகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டுவிட்டர் பதிவுக்கு ரிக் பேலெஸ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெவின் சுல்லிவன்.

நீங்கள் சிறந்தவர். உங்களுக்கு இந்திய உணவு வகைகளை பிடிக்கும் என்ற எண்ணத்தில், உங்களுக்காக ( பட்டர் சிக்கன், பராத்தா, ஷாக் பன்னீர், சன்னா மசாலா) டெவில்ஸ் புட் கேக், முந்திரி பட்டர் கிரீம். இந்த நிகழ்வை தாமதிக்காமல் கொண்டாடி மகிழ் என்று பேலெஸ் குறிப்பிட்டு உள்ளார்.
https://twitter.com/Rick_Bayless/status/1366791483425234950
ரிக் பேலெஸின் இந்த டுவிட்டர் பதிவுக்கு, நெட்டிசன்கள் பல்வேறு தரப்பட்ட பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 5

0

0