விநாயகர் சதுர்த்தி : இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென்..!

23 August 2020, 10:52 am
Joe_Biden_Updatenews360
Quick Share

இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இந்து சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும், நீங்கள் அனைத்து தடைகளையும் கடந்து, ஞானத்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். புதிய தொடக்கங்களை நோக்கி ஒரு பாதையை கண்டுபிடிப்பீர்கள்” என்று பிடன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பிற்கு சவால் விடும் வகையில், ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைக் கவர ஜோ பிடென் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். அதன் ஒரு அங்கமாகவே தற்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைக் கவர, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பிரச்சார வாசகங்களை உருவாக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார். மேலும் இதில் முத்தாய்ப்பான விஷயமாக இந்திய-கறுப்பின வம்சாவளியான கமலா ஹாரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப், 2016 தேர்தலிலேயே “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்பதை மாற்றி “ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்” என இந்தியர்களிடையே பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஹூஸ்டனில் ஹௌடி மோடி மூலமும், அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் மூலமும், இந்தியர்களின் வாக்குகளை தன் வசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ வீடியோவிலும் மோடியின் பெயரைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 32

0

0