அல்மாரா பாலைவனத்தின் மர்மக்குழி வதந்திக்கு முற்றுப்புள்ளி: 367 அடி குழியில் அழகிய நீர்வீழ்ச்சி…ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 1:55 pm
Quick Share

ஏமன்: அல்மாரா பாலைவனத்தில் 367 அடி கொண்ட மர்மகுழியில் அழகிய நீர்வீழ்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏமன் அல்மாரா பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய குழி உள்ளது. இந்த குழியை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு அதாவது மர்மக்குழி ன்றே அழைத்து வருகின்றனர்.

Image

மேலும் இந்த குழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், பூதம் இருப்பதாக இந்த ஊர்மக்கள் மூட நம்பிக்கையுடன் இருந்த வந்துள்ளனர். இதனால் இந்த குழி பகுதியின் அருகே செல்வதற்கே இவர்கள் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட இந்த மர்ம குழியில் என்ன இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து துணிச்சலுடன் அக்குழியில் இறங்கி ஆய்வு செய்துள்ளனர். உள்ளே சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

Image

இது குறித்து புவியியல் ஆய்வு மற்றும் கனிம வள ஆணையத்தின் இயக்குநர் ஜான் கூறுகையில், இந்த குழி குகைபோன்று நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் குகை முழுவதும் இருக்கின்றன.

மக்கள் நம்புவது போல் இங்கு எந்த பூதமும் இல்லை. இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை இன்னும் ஆய்வு செய்யவில்லை. இந்த ஆய்வில் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோல் பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்து கிடப்பதால் தான் துர்நாற்றம் வீசுகிறது.

Image

மேலும் இந்த குழி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்யும் போது அது தெரியவரும். மேலும் இந்த மர்மக்குழி ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 859

1

0