விலங்குகளுக்கு ரத்த வங்கி – நாய்களும் பூனைகளும் ரத்த தானம் செய்யும் ஆச்சர்யம்

2 March 2021, 8:59 am
Quick Share

உலகின் எல்லா இடங்களிலும் ரத்த வங்கிகள் இருக்கின்றன. அவை மனிதர்களுக்கான ரத்த வங்கிகளாகவே இருக்கின்றன. ஆனால் விலங்குகளுக்கான ரத்த வங்கிகளும் இருக்கின்றன என்பதை கேட்கும்போது சற்று ஆச்சயர்மாகத் தான் தெரியும். ஆனால் சமீப காலங்களில் உலகின் பல நாடுகளில் விலங்குகளுக்கான, குறிப்பாக செல்லப் பிராணிகளுக்கான ரத்த வங்கிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாய்களும் பூனைகளும் ரத்த தானம் செய்கின்றன.

நாயும் பூனையும் ரத்த தானம் செய்யுதா என்று ஆச்சர்யமாகப் பார்க்கலாம். ஆனால் இந்த ரத்த தானங்களில் இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

மனிதர்களின் ரத்தத்தில் எப்படி பல வகைகள் இருக்கின்றனவோ அதேபோல நாய் மற்றும் பூனையின் ரத்தத்திலும் பல வகைகள் இருக்கிறதாம். நாய்களின் ரத்தம் 12 குரூப்பும் பூனையின் ரத்தம் 3 குரூப்புமாக இருக்கிறதாம். இன்னொரு சுவாரஸ்யமும் இதில் இருக்கிறது. அது என்ன தெரியுமா? நாய், பூனைகள் ரத்த தானம் செய்கிற பொழுது, அவைகளுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்கத் தேவையே இல்லையாம்.

ஸ்டாக் பிரிட்ஜ், வர்ஜீனியா, பிரிஸ்டோவ் மற்றும் மேரிலாந்தின் அன்னபோலிஸ், கலிபோர்னியாவில் டிக்சன் மற்றும் கார்டன் க்ரோவ் ஆகிய வட அமெரிக்காவின் பல நகரங்களில் விலங்குகளுக்கான ரத்த வங்கிகள் இருக்கின்றன. இந்த ரத்த வங்கிகளுக்கு அந்த நகரில் வாழும் மக்கள் பலரும் அவ்வப்போது தங்களுடைய செல்லப்பிராணிகளை அழைத்துச் சென்று ரத்த தானம் செய்து வருகிறார்கள்.

விலங்குகளுக்காக ரத்த வங்கி இல்லாத இடங்களில் மக்களுக்கு ரத்த தானம் மற்றும் பிளாஸ்மா தானங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சரி. உலக நாடுகளில் மட்டும் தான் விலங்குகளுக்கான ரத்த வங்கி இருக்கிறதா? இந்தியாவில் இல்லையா என்ற கேள்வி வரலாம். இந்தியாவிலும் விலங்குகளுக்கான ரத்த வங்கி இருக்கிறது. தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கால்நடைக் கல்லூரியுடன் இணைந்த போதனா மருத்துவமனை ஆகியவற்றின் கீழ் தனுவாஸ் என்ற பெயரில் விலங்குகளுக்கான ரத்த வங்கி இயங்குகிறது.

Views: - 14

0

0