கொரோனா நிவாரண நிதி: அர்ஜெண்டினாவில் கோடீஸ்வர்களுக்கு சிறப்பு வரி விதிப்பு…!!

31 January 2021, 9:51 pm
Quick Share

புவெனஸ்ஐரிஸ்: அர்ஜெண்டினாவில் கோடீஸ்வரர்களுக்கான சிறப்பு வரியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் வாங்கவே அரசு திணறி வருகிறது. மேலும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனை சீர்செய்வதற்காக அர்ஜென்டினாவில் கோடீஸ்வரர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி அர்ஜெண்டினாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 சதவீத வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரியும் செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது.

இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது அர்ஜெண்டினாவில் அமலுக்கு வந்து இருக்கிறது.

Views: - 0

0

0