உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் கலைப்படைப்பு; எவ்வளவுக்கு விற்கப்படுகிறது தெரியுமா?

Author: Poorni
25 March 2021, 9:00 am
Quick Share

கொரோனா வைரஸ் பரவலின் போது, 7 மாதங்களுக்கும் மேலாக பிரிட்டிஷ் கலைஞர் சச்சா ஜாஃப்ரி என்பவர் வரைந்த உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் கலைப்படைப்பு, துபாயில், 62 மில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.507 கோடி) விற்பனையானது. அம்மாடியோவ்!

உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் ஓவிய கலைப்படைப்பு, துபாயில் 62 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது. உயிருள்ள கலைஞரின் கலைப்படைப்பு ஒன்று ஏலத்தில் விற்பனையானதில், இது இரண்டாவது அதிகபட்ச தொகையாகும். பிரிட்டீஷ் ஓவியர் சச்சா ஜாஃப்ரியின் ‘மனித நேயத்தின் பயணம்’ என்ற இந்த ஓவியம், மிகப்பெரிய கேன்வாஸ் ஓவியம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில், துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலின் பால்ரூம் தரையில் இந்த ஓவியம் வரையப்பட்டிருகிறது.

விற்பனைக்காக 70 ஆக பிரிக்கப்பட்டு கேன்வாஸ் ஏலத்தில் விடப்பட்டது. கிரிப்டோகரன்ஸி பிஸினஸ் செய்து வரும் துபாயில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரான ஆண்ட்ரே அப்தவுன் என்பவர் இதனை பெரும்தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார். 1800 சதுரமீட்டரில் வரையப்பட்டிருக்கும் இந்த கேன்வாஸ் ஓவியத்தை ஏலம் விட்டு, தொண்டு நிறுவனங்களுக்காக 30 மில்லியன் திரட்டுவதே ஜாஃப்ரியின் நோக்கம். ஆனால் அதைவிட அதிகமான தொகைக்கு இது ஏலம் போயிருக்கிறது.

கொரோனா லாக்டவுனின் போது துபாயில் இருந்த ஜாஃப்ரி, இதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். 1,065 பெயிண்ட் பிரஸ்கள் மற்றும் 6,300 லிட்டர் பெயிண்டை இந்த ஓவியத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார். அட்டகாசம் போங்க!!

Views: - 91

0

0