ராணுவக் கட்டுப்பாட்டில் மியான்மர்: ஆங் சான் சூகி சிறைபிடிப்பு?…

1 February 2021, 8:47 am
miyanmar - updatenews360
Quick Share

யாங்கூன்: மியான்மரில் ஆங் சான் சூ கியை ராணுவம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது. இந்நிலையில் ஆங் சான் சூ கி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியன்மரில் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆங் சான் சூ கி கூறியதாவது, நான் எங்கள் மக்களிடம் கடுமையாக பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0