பசிபிக் தீவுகளில் உள்ள குட்டி நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் ஆஸ்திரேலியா..! சீனாவிற்கு ஆதிக்கத்தை கட்டுப்படுத்த புதிய திட்டம்..!

5 May 2021, 9:25 am
Australia_flag_updatenews360
Quick Share

பசிபிக் பெருங்கடலில் செல்வாக்கை வளர்க்கவும், சீனாவிடமிருந்து வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொள்ளவும் ஆஸ்திரேலியா தனது முயற்சிகளை துரிதப்படுத்தி வருகிறது.

கம்யூனிஸ்ட் நாடான சீனா தற்போது உலகிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதோடு, தென்சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்தையும் உரிமை கொண்டாடுகிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.

சீனா தான் போட்டியாக நினைக்கும் அனைத்து மிகப்பெரிய நாடுகளுடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக முயற்சி எடுத்து வருகின்றன.
குறிப்பாக சுதந்திர -பசிபிக் கடல் பாதையை உறுதி செய்ய இந்த மூன்று நாடுகளும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

இந்த வகையில் ஆஸ்திரேலியா இன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டி தீவு நாடுகளான மார்ஷல் தீவுகள் மற்றும் பிரெஞ்சு பாலினீசியாவில் தனது தூதரகங்களைத் திறந்தது.

“வளமான மற்றும் பாதுகாப்பான ஒரு பிராந்தியத்திற்காக எங்கள் பசிபிக் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது” என்று ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி மரைஸ் பெய்ன் மற்றும் பசிபிக் மந்திரி செட் செசெல்ஜாவின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் துவாலு, குக் தீவுகள், பலாவ் மற்றும் நியுவில் திறக்கப்பட்ட புதியவை உட்பட ஆஸ்திரேலியாவில் இப்போது பசிபிக் பகுதியில் 19 தூதரகங்கள் உள்ளன. பசிபிக் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிடமும் மிக நெருங்கிய தூதரக உறவைக் கட்டமைக்கும் வகையில், ஆஸ்திரேலியா இதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

Views: - 72

0

0

Leave a Reply