வீரர்கள் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா..! விரக்தியில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வீரத்தைக் காட்டும் சீனர்கள்..!

21 February 2021, 11:25 am
india_china_border_faceoff_updatenews360
Quick Share

கடந்த ஆண்டு இந்திய இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது சீனா தனது நான்கு வீரர்கள் இறந்ததை ஒப்புக் கொண்ட ஒரு நாள் கழித்து, சீனாவில் உள்ள இந்திய தூதரகம், சீனர்களின் வெறுப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

சீன சமூக வலைத்தளமான வெய்போவில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக ஊடகக் கணக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதலுக்கு பிறகு எட்டு மாதங்கள் கழித்தது தற்போது சீனத் தரப்பில் நடந்த உயிரிழப்புகள் குறித்த உண்மை அம்பலமானதால், கோபமடைந்த சீன குடிமக்களால் வெறுக்கத்தக்க செய்திகள், துஷ்பிரயோகம் மற்றும் தூண்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

எந்தவொரு அந்நிய சக்திக்கும் எதிரான போராட்டத்தில் தங்கள் நாட்டின் வீரர்கள் இறப்பது பற்றிய செய்தி நீண்ட காலத்திற்கு முதல் முறையாக வெளியில் வந்துள்ளதால், விரக்தியடைந்த சீனர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில், தங்கள் வீரத்தைக் காட்டி, இந்தியா மீது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் இதற்கிடையில், ராணுவ வீரர்களின் மரணம் குறித்த தகவல்கள் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஏன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.

அதில், “கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, அந்த நேரத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால், உயிரிழப்புகளை ஒப்பிடுவதைத் தவிர்ப்பது எல்லை நிலைமையின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. இப்போது எல்லை மோதல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால், நாம் ஹீரோக்களின் செயல்களை பகிரங்கப்படுத்துகிறோம். இதனால் அனைத்து சீன மக்களும் சமாதானத்தின் தன்மையை புரிந்து கொள்ள அவர்களை பாராட்டவும் நினைவுகூரவும் முடியும்.” எனத் தெரிவித்துள்ளது.

தலையங்கம் மேலும், “1995 மற்றும் 2000’க்குப் பிறகு பிறந்தவர்கள் உட்பட இளம் வீரர்களின் தியாகம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சீன ராணுவம் குறித்து அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சீனாவின் நான்ஜிங் நகரத்தில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Views: - 6

0

0