கொரோனா 3வது அலையின் விளிம்பில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

15 July 2021, 6:07 pm
WHO - updatnews360
Quick Share

ஜெனிவா: உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்து உள்ளதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் 2ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. தற்போது துரதிர்ஷ்டவசமாக நாம் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கோவிட் தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நாடுகளில் கடந்த நான்கு வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 189

0

0