‘பெய்ரூர் வெடிவிபத்து’ பதவியை ராஜினாமா செய்கிறாரா லெபனான் பிரதமர்

11 August 2020, 9:41 am
Quick Share

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற மக்கள் போராட்டம் அந்நாட்டில் ஓங்கியுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் கடந்த 4-ஆம் தேதி, பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 160 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில், இந்த வெடி விபத்திற்கு அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என குறிப்பிட்டு, பொதுமக்கள் வீதிகளில் இரங்கி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர்.இதை கட்டுக்குள் கொண்டுவர அங்கு போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஆனால், அதையும் எதிர்த்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது.

இதனால், பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், விரட்டியும் அப்புரப்படுத்த முயன்ற ராணுவத்தினருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்ததால், லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் தியாப் அறிவித்துள்ளார.

லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஹாசன் தியாப் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 9

0

0