ஜோ பிடென் இமாலய சாதனை..! அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் வரலாறு காணாத வாக்குகள் பெற்று அசத்தல்..!

5 November 2020, 12:16 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் விட அதிக வாக்குகளை வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அமைத்த சாதனையை பிடன் விஞ்சியுள்ளார் என்று கூறப்படுகிறது. நவம்பர் 4’ஆம் தேதி நிலவரப்படி, பிடனுக்கு 70.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஜனாதிபதியாக போட்டியிட்ட அனைவரையும் விட அதிகம் என்று தேசிய பொது வானொலி (என்.பிஆர்) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் 2008’இல் ஒபாமா பெற்றதை விட 3,00,000 அதிக வாக்குகள் உள்ளன. இதன் மூலம் முன்னர் ஒபாமா 2008’இல் அமைத்த 69,498,516 என்ற பிரபலமான வாக்கு சாதனையை பிடென் விஞ்சிவிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக தேர்தல் களத்தில் உள்ள பிடென், குடியரசுக் கட்சித் தலைவரை விட 2.7 மில்லியன் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

முக்கிய போர்க்கள மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில் அவரது வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ட்ரம்ப் சமீபத்திய நிலவரப்படி 67.32 மில்லியன் வாக்குகளுடன் ஒபாமாவின் சாதனையை நெருங்கியுள்ளார்.

ஆரம்பகால வாக்களிப்பு மற்றும் மெயில்-இன் வாக்குகள் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெறப்பட்ட நிலையில், குறைந்தது 23 மில்லியன் வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டும் என்று என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது பிடனுக்கு தனது வாக்குகளை மேலும் அதிகரிக்க வாய்ப்பளிக்கும் எனக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0