10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்! அதுவும் தங்கத்தில்..!!

2 May 2021, 4:41 pm
Quick Share

பிரிட்டனின் நாணய தயாரிப்பு நிறுவனம், உலகின் மிகப்பெரிய தங்க நாணயத்தை, 10 கிலோ எடையில், 20 சென்டி மீட்டர் அகலத்தில் வடிவமைத்து இருக்கிறது.

பிரிட்டனின் நாணய தயாரிப்பு நிறுவனமான ராயல் மின்ட், அதன் 1,100 ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய நாணயத்தை வெளியிட்டிருக்கிறது. 10 கிலோ எடையில், 20 சென்டி மீட்டர் அகலத்தில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தயாரிக்க சுமார் 400 மணி நேரம் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மதிப்பு 10 ஆயிரம் யூரோ!

இந்த நாணயம் தயாரிப்புக்கு முன்னதாகவே விற்கப்பட்டு விட்டது. இதனை வாங்கியவர் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. புதுமையான தொழில்நுட்பத்துடன், பாரம்பரிய திறன்களை இணைத்து, சிறந்த கைவினைஞர்களின் குழு இந்த நாணயத்தை உருவாக்கி உள்ளனர். இதன் வடிமைப்பில், நடுவில் ராணி முடிசூட்டிய படி இருக்கும் படம் இருக்க, அவரை சுற்றி சிங்கம், கிரிஃபின், பால்கன், காளை, யேல், கிரேஹவுண்ட், டிராகன், யூனிகார்ன் மற்றும் குதிரை ஆகியவை அச்சிடப்பட்டிருக்கின்றன.

இங்கிலாந்தின் மிகப்பெரிய நாணயமான இதனை கலைப் படைப்பாக தயாரித்ததாகவும், இதற்காக தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நாணயம் தங்கள் திறமைக்கு சான்றாக இருந்தது எனவும், ராயல் மின்ட் நிறுவன இயக்குனர் தெரிவித்திருக்கிறார். சிக்கலை குறைக்க முதலில் மிஷன் கொண்டு வெட்டப்பட்ட இந்த நாணயம், பின் தேறிய கைவினை கலைஞர்களால் கையாலேயே செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நாணயத்தை தூக்கிட்டு போய், எப்படி சில்லறை மாத்துவாங்கனு தானே யோசிச்சிட்டு இருக்கீங்க!!

Views: - 112

0

0

Leave a Reply