ஏழு லட்சம் டாலர் நன்கொடை..! அமெரிக்க காட்டுத்தீயை கட்டுப்படுத்த போயிங் நிறுவனம் உதவி..!
19 September 2020, 7:05 pmஅமெரிக்க மேற்கு கடற்கரையில் பொங்கி எழும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ அமெரிக்க விமான நிறுவனமான போயிங் 7,00,000 டாலர் நன்கொடையை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியாவில் தீ நிவாரண முயற்சிகளை ஆதரிக்க, அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்திற்கு 5,00,000 டாலர்களை வழங்குவதாக போயிங் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள, 2,00,0000 டாலர் நிறுவனத்தின் ஊழியர்களில் கணிசமான அளவு வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்த மாநிலங்களில் உணவு உதவியை வழங்குவதற்காக செலவிடப்படும்.
“எங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். மிகவும் கஷ்டமான இந்த சூழலில்அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்று போயிங் வணிக விமானங்களின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டான் டீல் கூறினார்.
அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரி டான் ஹெர்ரிங், போயிங்கின் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தொற்றுநோய் காரணமாக கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் கூறினார்.
பொங்கி எழும் காட்டுத்தீ இதுவரை 30’க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களை தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயமாக இடம் பெயரச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.