ஐயோ பாவம்! 8 வயது சிறுவனை முழுங்கிய 6 மீட்டர் நீள முதலை

6 March 2021, 8:24 pm
Quick Share

இந்தோனேஷியாவில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவனை, 6 அடி நீள முதலை ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலையின் வயிற்றை கிளித்து, சிறுவனின் உடலை கிராமத்தினர் மீட்டெடுத்தனர்.

இந்தோனேஷியாவில் உள்ள போர்னியோ தீவில் உள்ள ஆற்றில், இரு சிறுவர்களும், அவர்களின் தந்தையும் நீந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெரிய முதலை ஒன்று 8 வயது சிறுவனை கடித்து தின்று விட்டது. தந்தையின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தை தடுக்க, அவர் முயற்சித்துள்ளார். வெறும் கைகளால் முதலையை தாக்கி இருக்கிறார். ஆனால் பலன் ஒன்றும் இல்லாமல் போக, முதலை சிறுவனை முழுங்கி விட்டது. இந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரியவர அனைவரும் ஆற்றின் கரையில் குவிந்தனர்.

வலை வீசி தேடிய போது, 6 மீட்டர் நீளமுள்ள ராட்சத முதலை சிக்கியது. ஆனால் அது இறந்த நிலையில் பிடிபட்டதாகவும், அதன் வயிற்றை கிழித்து, சிறுவனின் உடலை மீட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், பிடிபட்ட முதலையை குப்புற கவிழ்த்து, அதன் வயிற்றை கிழித்து, சிறுவனின் துண்டான உடலை மீட்பது பதிவாகி உள்ளது. அதன் அருகே, சிறுவனின் பெற்றோர் அழுதபடி நின்றிருக்கின்றனர்.

இந்தோனேஷியாவில் உள்ள இந்த ஆறு, முதலைகளின் வாழ்விடமாக உள்ளது. ஆனால், குளிக்கவும், சமையலுக்கு தண்ணீர் எடுக்கவும் மக்கள் ஆற்றுக்கு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாவம்! குளிக்க சென்ற இடத்தில் இப்படி ஒரு விபரீதம் நிகழப்போகிறது என அவர்களுக்கு தெரிந்திருக்காது!

Views: - 7

0

0