ஆற்றில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய பிரிட்டிஷ் தூதர்!! வைரலாகும் வீடியோ!!
17 November 2020, 12:03 pmசீனா : ஆற்றில் எதிர்பாராத விதமாக விழுந்த பெண்ணை பிரிட்டிஷ் தூதர் காப்பாற்றிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜாங்ஷன் நகராட்சி தூதுவராக பணியாற்றி வருபவர் 61 வயதான ஸ்டீபன் எலிசன். இவர் ஜாங்ஷன் கிராமத்திற்கு அருகே சுற்றுலா தளத்தை பார்வையிட்டிருந்த போது 24வயதுடைய இளம் பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.
அலறல் சத்தத்தை கேட்ட ஸ்டீபன் எலிசன் உடனே உதவி செய்ய ஓடினார். ஆற்றில் தத்தளித்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து ஆற்றில் மெல்ல மெல்ல மூழ்கினார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் கால்களில் இருந்து ஷீக்களை எரிந்து விட்டு ஆற்றில் குறித்த எலிசன், அப்பெண்ணை காப்பாற்றினார். இதை சுற்றுலா தளத்தில் இருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்தனர். தற்போது அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.