சீ…! பார்லிமென்ட் ஜூம் மீட்டிங்கில் நிர்வாணமாக நின்ற கனடா எம்.பி!

17 April 2021, 8:30 am
Quick Share

கனடா பார்லிமென்ட் கூட்ட ஜூம் காலில், வீடியோ கான்பரன்சிங் வழியாக நடந்த போது, எம்.பி., ஒருவர் நிர்வாணமாக தோன்றினார். இதனால் மற்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. மிகவும் பயனுள்ள இந்த தொழில்நுட்பம், சிலரின் அஜாக்கிரதையால், பெரும் சர்ச்சையும் உருவாக்க தவறவில்லை. இப்படி கனடாவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில் பார்லிமென்ட் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ஜூம் காலில், வீடியோ கான்பரன்சிங் வழியாக நடந்து வருகிறது. எம்.பி.,க்கள் வீடியோ கான்பரன்சிங் வழியாக கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கனடா பார்லிமென்ட்டில் லிபரல் எம்.பி.யாக இருப்பவர் வில்லியம் அமோஸ். இவர், கடந்த புதன்கிழமை நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், அரை நிர்வாணமாக தோன்றினார். கையில் மொபைல் போனுடன், ஒரு மேஜைக்கு பின், நிர்வாணமாக நின்ற அவரது போட்டோவும், வீடியோவும் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

அநாகரிமாக நடந்து கொண்ட அமோஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அனரது சக எம்.பி.க்கள் கோபமாக தெரிவித்துள்ளனர். தனது செயலுக்காக சகாக்களிடம் ஆமோஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து, ஆமோஸ் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நான் மிகவும் துரதிர்ஷ்டவசமான தவறைச் செய்தேன், வெளிப்படையாக நான் வெட்கப்படுகிறேன். நடை பயிற்சி முடித்து, உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக, இந்த சம்பவம் நடந்து விட்டது. எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Views: - 33

0

0