இந்தி தெரியாது போடா : நான் எப்படா அப்படி சொன்ன? கனடா பிரதமரின் புகைப்படம் வைரல்!!

15 September 2020, 11:15 am
Canada PM - updatenews360
Quick Share

கனடா பிரதமர் வெளியிட்ட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டிஷர்ட்டுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த விவகாரம் தீவிரமாக எழுந்து வருகின்றன. கனிமொழி விமான நிலைய விவகாரம் முதல், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

மும்மொழி கொள்கை குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.

தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தி தெரியாது போடா மற்றும் தமிழ் பேசும் இந்தியன் போன்ற டி-சர்ட்டுகள் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வைரலானது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த புகைப்படம் உண்மையில் ஜஸ்டின் ட்ரூடோ வைத்திருந்த டிஷர்ட்டில் உள்ள வாசகம் ‘எடிட்‘ செய்யப்பட்டுள்ளது என தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து குறித்து அடங்கிய வாசகங்கள் அந்த டிஷர்ட்டில் எழுதப்பட்டிருப்பது வெளியான புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

சிவனேனு இருந்த மனுஷன தேவையில்லாம வம்புக்கு இழுத்துவிட்டிருக்காங்க நம்ம நெட்டிசன்கள், உண்மையில் ‘அந்த தண்ணி என் தண்ணி இல்ல‘ என வடிவேலு சொல்வதை போல இப்போது டிஷர்ட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0