ஹஜ் பயணம் மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகள்..! முஸ்லீம்கள் மீதான பிடியை இறுக்கும் சீனா..!

Author: Sekar
12 October 2020, 7:32 pm
Haj_Updatenews360
Quick Share

சவூதி அரேபியாவிற்கு ஹஜ் பயணம் செல்லும் முஸ்லீம்களுக்கு சீனா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த யாத்திரை சீனாவின் இஸ்லாமிய சங்கத்தால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், யாத்ரீகர்கள் சீன சட்டங்களை பின்பற்றி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் 20 மில்லியன் முஸ்லீம்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த உய்குர்கள் மற்றும் சீன இன வம்சாவளியைச் சேர்ந்த ஹுய் முஸ்லீம்கள் அடங்குவர்.

உய்குர்கள் மற்றும் ஹுய் முஸ்லீம்கள் இருவரும் தலா 10 மில்லியன் மக்கள் தொகை கொண்டவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 சீன முஸ்லீம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஹஜ் யாத்திரைக்காக வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குமுறை மொத்தம் 42 விதிகளைக் கொண்டுள்ளது. இது சீன முஸ்லீம்களின் யாத்திரை சட்டங்களின்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன இஸ்லாமிய சங்கம் மட்டுமே சீன முஸ்லீம்களுக்கு ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்ய அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பாகும்.

வேறு எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் பயணங்களை ஒழுங்கமைக்கக் கூடாது. ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும்போது சீன குடிமக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் இது டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் சீனாவின் மற்றும் செல்லும் நாட்டின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். மேலும் விதிமுறைகளின்படி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய அரசுத் துறைகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும் சட்டவிரோத ஹஜ் நடவடிக்கைகளை தடை செய்யவும் கோரப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த உய்க்குர் இந முஸ்லீம்களை சீனா இன அழிப்பு செய்வதாக தொடர் குற்றச்சாட்டு வெளியாகும் நிலையில், சீனாவின் தற்போதைய இந்த அறிவிப்பு, சீனாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள நினைக்கும் உய்க்குர் முஸ்லீம்களை மேலும் கட்டுப்படுத்தவே வலி வகுக்கும் என முஸ்லீம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Views: - 44

0

0