அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடெனின் வெற்றியை அங்கீகரிக்க மறுத்த சீனா..! காரணம் என்ன..?

9 November 2020, 7:49 pm
Joe_Biden_Xi_Jinping_UpdateNews360
Quick Share

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடெனுக்கு உலக நாடுகள் அனைத்தும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. அமெரிக்க தேர்தல்களின் முடிவுகளை நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளால் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி சீனா பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தலில் பிடென் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றிக்கு சீனா இன்னும் அதிகாரப்பூர்வ கருத்துக்களை வெளியிடவில்லை. ஆனால் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள், தேர்தல் குறித்து மேலே குறிப்பிட்ட கருத்துக்களை கூறி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து இதுவரை அறிக்கை வெளியிடாத சில நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டியபோது, ​​சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பிடென் அறிவித்ததை நாங்கள் கவனித்திருக்கிறோம்.” என்பதோடு முடித்துக் கொண்டு வாழ்த்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

“அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படும் என்பது எங்கள் புரிதல்” என்று அவர் மேலும் கூறினார்.

சீனா தனது அறிக்கையை எப்போது வெளியிடும் அல்லது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை காத்திருக்குமா என்று கேட்டதற்கு, வாங், “நாங்கள் வழக்கமான சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, மெக்ஸிகோ உள்ளிட்ட சில முக்கிய நாடுகளும் சீனாவைப் போல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான பிடெனின் வெற்றியை ஏற்க மறுத்துவிட்டார்.

டிரம்பின் கீழ் ஒரு புதிய தாழ்வைத் தொட்டுள்ள சீனா-அமெரிக்க உறவுகள் குறித்து வாங், “சீனாவும் அமெரிக்காவும் தகவல் தொடர்பு மற்றும் உரையாடலை முடுக்கிவிட வேண்டும். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் வேறுபாடுகளை நிர்வகிக்க வேண்டும், அடிப்படையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் வாதிட்டோம். பரஸ்பர நன்மை மற்றும் சீனா-அமெரிக்க உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்.” எனக் கூறியுள்ளார்.

Views: - 18

0

0