சோதனைகள் முடியும் முன்பே வலுக்கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் சீனா..! நிபுணர்கள் எச்சரிக்கை..!
27 September 2020, 5:57 pmசீனா தனது ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்துகிறது. அவை இன்னும் சோதனையில் உள்ளதாகவும், எனவே அவற்றின் செயல்திறன் நிரூபிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசியைப் பெறுபவர்கள் அறிவிக்கப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படுகிறார்கள். அதன்படி அவர்கள் அதைப் பற்றி செய்தி ஊடகங்களுடன் பேச முடியாது.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தடுப்பூசி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அதிக ஆபத்துள்ள மக்கள் அவசர அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறார்கள். உலகளாவிய சுகாதார நிபுணர்கள், தடுப்பூசியை செலுத்த உண்மையிலேயே அவர்களின் ஒப்புதல் பெறப்படுகிறதா இல்லையா என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை உலக சுகாதார நிறுவனம் ஆதரித்ததாக சீனா கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஜெங் ஜாங்வே தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “தற்போதைய அவசரகால சூழ்நிலையில் மருத்துவ தயாரிப்புகளை தங்கள் அதிகார எல்லைக்குள் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது மருத்துவ பரிசோதனைகளில் 11 தடுப்பூசிகள் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் நான்கு தடுப்பூசிகள் உள்ளன. இரண்டு அரசு ஆதரவுடைய சீன தேசிய பயோடெக் குழுமமும், ஒன்று சினோவாக் பயோடெக்கும் உருவாக்கியது. மற்றொரு தடுப்பூசி கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கியது. இது ஜூன் மாதத்தில் சீன இராணுவத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0
0