இந்திய எல்லையில் 60,000 சீன வீரர்கள்..! ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்க வெளியுறவுச் செயலர் வலியுறுத்தல்..!

By: Sekar
10 October 2020, 2:18 pm
mike_pompeo_updatenews360
Quick Share

இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60,000 துருப்புக்களைக் குவித்துள்ளது என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சீனாவின் மோசமான நடத்தை மற்றும் குவாட் நாடுகளுக்கு அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களுக்காக சீனாவை கடுமையாக விமர்சித்தார்.

குவாட் குழு என அழைக்கப்படும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்தோ பசிபிக் நாடுகள் கடந்த செவ்வாயன்று டோக்கியோவில் கூடி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பிறகு முதல்முறையாக நேரடியாக சந்தித்து விவாதித்தனர்.

இந்தோ-பசிபிக், தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு லடாக்கில் சீனாவின் ஆக்கிரோஷமான இராணுவ நடத்தையின் பின்னணியில் இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவிலிருந்து திரும்பிய பின்னர் நேற்று ஒரு நேர்காணலில் இந்தியர்கள் தங்கள் வடக்கு எல்லையில் 60,000 சீன வீரர்களைப் பார்க்கிறார்கள் என்று பாம்பியோ தி கை பென்சன் ஷோவிடம் கூறினார். 

டோக்கியோவில் செவ்வாயன்று பாம்பியோ வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தோ-பசிபிக் மற்றும் உலகெங்கிலும் முன்னேற, அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். ஜெய்சங்கருடனான தனது சந்திப்பை மிகவும் ஆரோக்கியாமான ஒன்றாக அவர் விவரித்தார்.

லாரி ஓ’கோனருடனான மற்றொரு நேர்காணலில், பாம்பியோ ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனது சகாக்களுடனான தனது சந்திப்புகளில், அவர்கள் ஒரு புரிந்துணர்வுகளையும் கொள்கைகளையும் உருவாக்கத் தொடங்கினர் என்றும் இது சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து எதிர்கொள்ளும் வகையிலான ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Views: - 32

0

0