நோய் பாதிப்பை கண்டறிய மொபல் ஆப்… கொரோனாவால் பாதித்த சீனா முயற்சி!

14 February 2020, 7:00 pm
Mobile app updatenews360
Quick Share

நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய ஏதுவாக மொபைல் ஆப் வடிவமைக்கும் பணியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவில் தோன்றி, உலககெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். குறிப்பாக சீனாவில் மட்டும் தினமும் நூற்றுக்கணக்கானோர் மாண்டு வருகின்றனர். அங்கு மட்டும் பலி எண்ணிக்கை 1,500 நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துவிட்டது.

கொரோனா வைரஸுக்கு ஒருபுறம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும் இதுவரை சாதகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதேநேரம் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நோய் பாதிப்பு உள்ளவர்களை எளிதில் அடையாளம் காணும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.  அதாவது, நோய் பாதிப்புள்ளவர்களை கண்டறிய மொபைல்போன் செயலியை வடிவமைத்து வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் 17ஆம் தேதி, முறைப்படி இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் எனவும், மொபைல்போன் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் இதை மொபைல்போனில் நிறுவ முடியும் என்றும் சீன செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த செயலி குறித்த தகவல் வெளியானதுமே, ஏறத்தாழ 10 கோடி பேர்,  அது குறித்து விசாரித்துள்ளதாக,  செயலியை வடிவமைத்து வரும் சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply