ஹாங்காங் சட்டத்திற்கு ஆதரவு கொடுங்க..! இந்தியாவிடம் கையேந்தும் சீனா..!

22 May 2020, 9:59 pm
india_china_UpdateNews360
Quick Share

ஹாங்காங்கில் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சர்ச்சைக்குரிய முடிவுக்கு சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் ஆதரவையும் புரிந்துணர்வையும் கோரியுள்ளது.

புதிய சட்டம் முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கில்,நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடும் அசச்சுறுத்தலாக உள்ள பிரிவினைவாத சக்திகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில் (எச்.கே.எஸ்.ஏ.ஆர்) தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவது என்பது முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரம் மற்றும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் தலையிடாத வண்ணம் செய்வதே இதன் நோக்கமாக உள்ளது.   

ஹாங்காங் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை கடுமையாக்குவதற்காக சீனா தனது பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் வரைவை  அறிமுகப்படுத்தியது. இது சீன ஆட்சியின் கீழ் 1997 முதல் சுயாட்சி மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களை கொண்டுள்ள ஹாங்காங்கிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கக்கூடும்.

ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலம் ஆகும். ஜூலை 1, 1997 அன்று பிரிட்டன் சீனாவிற்கு இறையாண்மையை திருப்பியளித்ததிலிருந்து ஒரு “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” கொள்கையை அது அமல்படுத்தியுள்ளது. இது சீனாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லாத சில சுதந்திரங்களை அனுமதித்துள்ளது.

“உங்கள் நாடு ஹாங்காங்கோடு நெருக்கமான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும், மக்களிடமிருந்து மக்கள் பரிமாற்றங்களையும் பராமரிக்கிறது. ஹாங்காங்கின் செழிப்பு மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை உங்கள் நாடு உட்பட முழு சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு ஏற்ப உள்ளது.

அதே போல் ஹாங்காங்கில் உங்கள் நாட்டின் நியாயமான நலன்களைப் பாதுகாக்கும் சீனாவின் பொருத்தமான நடைமுறைகளை உங்கள் அரசாங்கம் புரிந்துகொண்டு ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அது இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கூறியது.

Leave a Reply