12 நாடுகளில் ராணுவ தளங்களை நிறுவும் சீனா..?அமெரிக்க ராணுவ தலைமையகம் அதிர்ச்சித் தகவல்..!

2 September 2020, 1:35 pm
China_Flag_UpdateNews360
Quick Share

இந்தியாவின் அண்டை நாடுகளில் மூன்று உட்பட சுமார் 12 நாடுகளில் சீனா அதிக வலுவான ராணுவ தளங்களை அமைக்க முயற்சி செய்கிறது. அதன் இராணுவத்தை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் தனது வல்லாதிக்கத்தை உலகம் முழுவதும் நிலைநிறுத்த விரும்புவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய மூன்று இந்திய அண்டை நாடுகள் மட்டுமல்லாது, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, செஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா, மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனா தனது இராணுவ தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வலுவாக்க விரும்புவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று இது தொடர்பாக அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட “சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி) 2020 சம்பந்தப்பட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்” என்ற தனது ஆண்டு அறிக்கையில், பென்டகன் இந்த சாத்தியமான விவகாரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே சீன இராணுவ தளவாட வசதிகள் டிஜிபூட்டியில் உள்ள சீன இராணுவ தளத்தில் உள்ளது. இது இந்திய பெருங்கடலில் சீனாவின் கடற்படை, வான் மற்றும் தரைப்படை திட்டங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“ஒரு உலகளாவிய சீன இராணுவ நெட்வொர்க் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் தலையிடலாம் மற்றும் சீனாவின் உலகளாவிய இராணுவ நோக்கங்கள் உருவாகும்போது அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கக்கூடும்” என்று பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதேபோல், சீனா ஒன் பெல்ட் ஒன் ரோட்டையும் (ஓபிஓஆர்) தனது ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது. அதன் தேசிய புத்துணர்ச்சியின் மூலோபாயத்தை ஆதரிக்கிறது.” என பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 5

0

0