ஆளைக் கொள்ளாமல் துன்புறுத்தும் டெக்னிக்..! இந்திய வீரர்களுக்கு எதிராக மைக்ரோவேவ் ஆயுதத்தை பயன்படுத்திய சீனா..?

17 November 2020, 6:55 pm
Microwave_Weapon_China_UpdateNews360
Quick Share

லடாக்கில் மிகவும் குளிரான சூழ்நிலை நிலவும் இந்த சமயத்தில், இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான எல்லை மோதல் நீடிக்கும் நிலையில், சீன இராணுவம் களத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக ஒரு மைக்ரோவேவ் ஆயுதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் இரண்டு மூலோபாய மலையடிவாரங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் மைக்ரோவேவ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக ஒரு முன்னணி இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுதத்தைப் பயன்படுத்துவது மலையடிவாரங்களை வெப்பம் மிகுந்த சூழ்நிலைக்கு மாற்றியது என்றும் இது இந்திய வீரர்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்தியது மற்றும் வழக்கமான மோதல் இல்லாமல் சீனா தங்கள் நிலைகளை திரும்பப் பெற்றது என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரான ஜின் கன்ராங் கூறிய கூற்றுக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஒரு சொற்பொழிவின் போது, ​​ஆயுதத்தைப் பயன்படுத்துவது சீனாவுக்கு நேரடி ஷாட் விதிமுறையை பின்பற்ற உதவியது என்று கூறினார். “மைக்ரோவேவ் தாக்குதல் ஆகஸ்ட் 29 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 2019 அறிக்கையின்படி, மைக்ரோவேவ் ரேடார் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மரணம் அல்லாத ஆயுத அமைப்பில் சீனா தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த மைக்ரோவேவ் நுண்ணலைகள் உடல் திசுக்களை வெப்பமாக்கும். இதனால் மண்டை ஓட்டின் உள்ளே ஒரு அதிர்ச்சி அலை ஏற்படுகிறது. இது காதுகளால் கண்டறியப்படலாம். மேலும் உடல் ரீதியாக மிகப்பெரும் வலியை ஏற்படுத்தி நிலைகுலையச் செய்துவிடும்.

பல மாதங்களாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் போது, ​​இந்தியாவும் சீனாவும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து இன்னும் கையெழுத்திடப்படாத வாய்மொழி உடன்பாட்டை எட்டியுள்ளன என்ற தகவல்களின் பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.