“இது நடந்தால் சீனா அமெரிக்காவையே சொந்தம் கொண்டாடும்”..! டொனால்டு டிரம்ப் பகீர்..!

22 August 2020, 1:10 pm
DonaldTrump_Updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தலில் தனது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடெனைத் தேர்ந்தெடுத்தால், சீனா அமெரிக்காவை சொந்தமாக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2020’ஆம் ஆண்டு தேசிய கொள்கைக்கான கவுன்சிலில் உரையாற்றிய டிரம்ப், ஜோ பிடெனின் சீனா குறித்த கொள்கைகள் தான் அமெரிக்காவின் தலையாய பிரச்சினை என்பதை வலியுறுத்தினார்.

“சீனா எந்த வகையிலும், வடிவத்திலும் அவர் பேச்சில் குறிப்பிடப்படவில்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா நம் நாட்டை சொந்தமாக்கும். அவர்கள் நம் நாட்டை சொந்தமாக்குவார்கள். ஆனால் நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்” என்று அவர் கூறினார்.

“உளவுத்துறை அறிக்கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஜோ பிடன் வெல்ல வேண்டும் என்று சீனா மிகவும் விரும்புகிறது. தேர்தலில் நான் வெல்ல வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் அது மிகவும் அவமானகரமானதாக இருக்கும். ஆனால் சீனா நான் வெல்வதை விரும்பாது” என்று டிரம்ப் மேலும் கூறினார்.

பிடனை மேலும் தாக்கிய அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவைக் கிழிக்க இவ்வளவு நேரம் செலவிடும் ஜனநாயகக் கட்சியினரால் நாட்டை வழிநடத்த முடியாது என்றார்.

“ஜனநாயகக் கட்சியின் கோபத்தையும் வெறுப்பையும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது. நம் வாழ்நாளில் மிகப் பெரிய தேர்தல் வரவிருக்கிறது. அமெரிக்காவைக் கிழிக்க இவ்வளவு நேரம் செலவிடும் அமெரிக்கரை எந்தக் கட்சியும் வழிநடத்த முடியாது.” என்று டிரம்ப் கூறினார்.

முன்னதாக வியாழக்கிழமை, 77 வயதான பிடென், நான்கு நாள் மெய்நிகர் ஜனநாயக தேசிய மாநாட்டின் இறுதி நாளில் ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்.

“அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான இந்த பரிந்துரையை நான் மிகுந்த மரியாதையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். என்னால் ஒரு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முடிந்த போது, நிச்சயம் நான் அமெரிக்க ஜனாதிபதியாகவும் இருப்பேன். என்னை ஆதரிக்காதவர்களுக்கும் சேர்த்தே நான் கடினமாக உழைப்பேன்.”என்று அவர் 25 நிமிடங்கள் நீடித்த உரையில் கூறினார்.

“இது ஒரு வாழ்க்கையை மாற்றும் தேர்தலாகும். இது அமெரிக்காவின் எதிர்காலத்தை மிக நீண்ட காலத்திற்கு தீர்மானிக்கும். எந்த தவறும் செய்யாதீர்கள். ஒருங்கிணைந்தால் நம்மால் முடியும் மற்றும் அமெரிக்காவில் இந்த இருளின் பருவத்தை வெல்ல முடியும்.” என்று பிடன் மேலும் கூறினார்.

Views: - 23

0

0