திபெத்துக்கு திடீர் பயணம் செய்த சீன வெளியுறவு அமைச்சர்..! பதட்டத்திற்கு மத்தியில் பயணம் எதற்கு..? பரபரப்புப் பின்னணி..!

17 August 2020, 1:07 pm
china_india_updatenews360
Quick Share

இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி கடந்த வாரம் திபெத் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.

வெள்ளிக்கிழமை தனது பயணத்தின் போது, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டேட் கவுன்சிலராகவும் உள்ள வாங், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் முக்கியம் என்று வலியுறுத்தினார் என்று அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இப்பிராந்தியத்தின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் முக்கியமானது என்று குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டி உள்ளூர் திபெத் டெய்லி தெரிவித்துள்ளது.

திபெத் தவிர, வாங் எல்லைப் பகுதிகளுக்கும் சென்று வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு கட்டிடம் மற்றும் கிராமங்களை நிர்மாணித்தல் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.

சீன மூத்த தலைவர்களும் அதிகாரிகளும் வருடத்திற்கு ஒரு முறை திபெத்துக்கு வருகை தருகிறார்கள். ஆனால் வெளியுறவு மந்திரி திபெத் பகுதிக்கு வருவது அசாதாரணமானது.

இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவின் வெளியுறவு மந்திரி திபெத் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு வருகை தந்தது முக்கியத்துவம் பெறுகிறது.

மே 5 முதல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கின் பல இடங்களில் தொடர்ந்து மோதல் போக்கிலேயே உள்ளன. கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பின்னர் பதற்றம் பல மடங்கு அதிகரித்தது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

இராணுவம் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உரையாடல் இதுவரை 14, 15 மற்றும் 17 ஏ ரோந்து புள்ளிகளில் முழுமையான படைவிலகல் செய்யப்பட்டுள்ளது. சீனத் துருப்புக்கள் கால்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து பின்வாங்கினர். மேலும் பாங்காங் த்சோ பகுதியிலும் தங்கள் இருப்பைக் குறைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 2’ம் தேதி, இந்தியாவும் சீனாவும் ஐந்தாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைத்து மோதல் புள்ளிகளிலிருந்தும் சீன துருப்புக்கள் முன்கூட்டியே பின்வாங்குவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தது.

கடைசி சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியா தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த விலையிலும் சமரசம் செய்யாது என்று சீனாவுக்கு தெரிவித்ததோடு, கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளிலும் நிலையை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தியது.

Views: - 1

0

0