2027’இல் அமெரிக்க ராணுவத்துக்கு இணையாக சீன ராணுவம்..? சீன அதிபரின் கனவு பலிக்குமா..?

12 November 2020, 9:10 pm
Chinese_Military_UpdateNews360
Quick Share

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற அதிகாரிகளின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கருத்துக்களின்படி, சீனா தனது இராணுவத்தை 2027’க்குள் அமெரிக்காவுக்கு நிகராகவும், மற்ற முன்னணி சக்திகளுக்கு இணையாக நவீன ராணுவமாக மாற்ற விரும்பினால், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் அரசால் நடத்தப்படும் மக்கள் பதிப்பகத்தால் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு சிறு புத்தகத்திலிருந்து வந்துள்ளன. அதில் அதிபர் ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கான சமீபத்திய ஐந்தாண்டு திட்டத்தை கோடிட்டுக் காட்டினர்.

இராணுவ நவீனமயமாக்கல் 67 வயதான ஜி ஜின்பிங்கால் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்குவதோடு, சீன இராணுவத்தின் தலைவராகவும் உள்ளார்.

சீனா இந்த ஆண்டு சுமார் 179 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு செலவினங்களுக்குப் வழங்கப்படும் பட்ஜெட்டான 732 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அடுத்து மிக உயர்ந்ததாகும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) இராணுவ செலவு புள்ளிவிவரங்களின்படி, 2019’ஆம் ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு செலவு 232 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபத்திய முக்கிய மாநாடு 2027’க்குள் அமெரிக்காவுக்கு இணையாக ஒரு முழுமையான நவீன இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை இறுதி செய்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் 2027’ஆம் ஆண்டளவில், சீனா ஒரு முழுமையான நவீன இராணுவத்தை உருவாக்கும். இது தேசிய வலிமையுடன் ஒத்துப்போகும் மற்றும் எதிர்கால தேசிய பாதுகாப்புத் தேவையை பூர்த்தி செய்யும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Views: - 28

0

0

1 thought on “2027’இல் அமெரிக்க ராணுவத்துக்கு இணையாக சீன ராணுவம்..? சீன அதிபரின் கனவு பலிக்குமா..?

Comments are closed.