பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசி..! அண்டை நாட்டு ராணுவங்களுக்கு தடுப்பூசி வழங்கும் சீன ராணுவம்..!

7 February 2021, 7:16 pm
vaccine_shot_Updatenews360
Quick Share

பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து 5,00,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, சீன இராணுவம் இன்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது.

சீன ராணுவம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சீன இராணுவத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி உதவியைப் பெற்ற முதல் வெளிநாட்டு இராணுவமாக பாகிஸ்தான் ராணுவம் மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

எனினும், அந்த அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இதே போல் கம்போடிய இராணுவத்திற்கும் அந்நாட்டு ராணுவத்தின் கோரிக்கையின் பேரில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.

சீன இராணுவத்திடமிருந்து கொரோனா தடுப்பூசி உதவியைப் பெற்ற வெளிநாட்டு இராணுவத்தின் முதல் தொகுப்பில் கம்போடிய இராணுவமும் ஒன்று என்று சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய ஐந்து லட்சம் அளவுகளுக்கு கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0