குழந்தையை சுமக்கும் டெலிவரி பாய்! மனதை உருக வைக்கும் சீனாக்காரர்!

3 April 2021, 11:15 am
Quick Share

சீனாவில் உணவு டெலிவரி பணி செய்யும் ஒருவர், தனது இரண்டு வயது மகளை சுமந்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியதுடன், உருக்கமான அவரது கதையும் தெரியவர, நெட்டிசன்கள் மனதை இளக்கி உள்ளது.

படித்த இளைஞர்கள் பலரும், வேலை கிடைக்காமல், குடும்ப சூழ்நிலை கருதி, உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும், பல கதைகள் நிச்சயம் இருக்கும். இங்கு ஒருவரை பாருங்கள்.. சீனாவை சேர்ந்த இந்த டெலிவரி பாய், தனது மனைவியின் வேலை பழுவை குறைப்பதற்காக, தனது இரண்டு வயது மகளை, தான் உணவு டெலிவரி செய்ய செல்லும் இடங்களுக்கு எல்லாம், முதுகில் சுமந்தும், காலுக்கு இடையே வைத்தும் அழைத்து பைக்கில் அழைத்து செல்கிறார்.

சீனாவை சேர்ந்தவர் லீ பயர். உணவு டெலிவரி செய்யும் பணியை அவர் செய்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது மனைவியும் வேலைக்கு செல்ல, அவர்களது குழந்தையை பார்த்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தனது பணியின் போது, தானே குழந்தைகயை அழைத்து செல்வதாக லீ அவரது மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தான் உணவு டெலிவரி செல்ல இடங்களுக்கெல்லாம், தனது இரண்டு வயது மகளை உடன் அழைத்து செல்கிறார். தனக்கு 6 மாதம் இருக்கும் போதிலிருந்து குழந்தை தனது தந்தையுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

பசிக்கும் நேரத்தில், புட்டி பால், வேலை இருக்கும் போது பைக்குள் அமர வைப்பது என இவர்களின் பயணம் சென்று கொண்டிருக்கிறது. தன் மகள் பெரும்பாலும் அழ மாட்டாள் எனவும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் எனவும், லீ கூறியிருக்கிறார். மேலும் குழந்தை தன்னுடன் இருப்பதால், தனக்கு எந்த சிரமமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவரது கதை சமூக வலைதளங்களில் பகிர, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0