பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தாக்கிய சீனத் தொழிலாளர்கள்..! வேடிக்கை பார்க்கும் பாகிஸ்தான் ராணுவத் தலைமை..?

9 August 2020, 5:28 pm
CPEC_Pakistan_UpdateNews360
Quick Share

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் பொருளாதார நடைபாதையான சிபிஇசி திட்டத்தில் பணிபுரியும் சீனத் தொழிலாளர்கள் ஜூலை 21 அன்று பாகிஸ்தான் வீரர்களை அவமதித்து தாக்கியபோது, அதற்கு வீரர்கள் பதிலடி கொடுக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டது தெரிய வந்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஹவில்தர் அசதுல்லா மற்றும் ராணுவப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஃபசல் உர் ரஹ்மான் ஆகிய இரு வீரர்களை சீனத் தொழிலாளர்கள் அடித்து நொறுக்கினர்.

சீனத் தொழிலாளர்களில் ஒருவரான லி யுயூன், ஹவில்தாரை இரண்டு முறை தலையில் அடித்தார் என்றும் மற்ற தொழிலாளர்களான லி யுஜுன், லி குயோயிங் மற்றும் பு லீ ஆகியோர் ராணுவ பொறியியல் துறையைச் சேர்ந்த வீரரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் பாகிஸ்தானில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட சக்திவாய்ந்த பாகிஸ்தான் இராணுவத்தை விட, சீனர்கள் சிறப்பு அதிகாரம் பொருந்தியவர்களாக, பாகிஸ்தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளதாக பேசப்படுகிறது.

பாகிஸ்தானில் இது போன்ற தாக்குதல் முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே போன்ற ஒரு சம்பவம் சிபிஇசியின் மெயின் லைன் 1’இல் பணிபுரியும் சீனத் தொழிலாளர்களுக்கும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய படையினருக்கும் இடையில் நடந்தது.

அப்போது என்ன நடந்தது என்பதை விளக்கி, பஹவல்பூரில் உள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவின் விங் 27’இன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் இம்ரான் காசிம், 341 லைட் கமாண்டோ பிரிகேட் தலைமையகத்திற்கு கடிதம் எழுதினார். தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களை நிலைநிறுத்துவது தொடர்பாக சீனர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வீரர்கள் தாக்கப்பட்டாலும், முகாம் கமாண்டன்ட் மேஜர் ஷெஜாத் தனது ஆட்களை விடுவிக்கும் படி கேட்டார். லெப்டினன்ட் கேணல் காசிம் போன்ற அதிகாரிகள் சீன ஒப்பந்தக்காரர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களின் பணத்தை எடுத்துக்கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் வழங்குகிறார்கள் என்பதை அறிந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மனச்சோர்வடைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

பாகிஸ்தான் சட்டத்தை விட உயர்வாக வைக்கப்பட்டுள்ள சீனர்களிடம், மேஜர் ஷெஜாத், இந்த சம்பவம் குறித்து ஒரு கேள்வி கூட கேள்வி கேட்கவில்லை. அதற்கு பதிலாக, மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல் பெற்றார் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இத்தகைய மோதல்களை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர். ஜூன் 2019’இல், 341 லைட் கமாண்டோ படைப்பிரிவின் 86’வது பிரிவின் இராணுவ வாகனங்களைப் பயன்படுத்தி சீனர்கள் சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு இரண்டு முறை சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையே சீன கட்டுமான நிறுவனங்களால் மோசமான தரத்துடன் கூடிய பொருட்கள் பயன்படுத்தபடுவதாலும், கட்டணச் சிக்கல்களாலும் திட்டத்தின் தாமதங்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. மோசமான தரத்தால் இஸ்லாமாபாத்தில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டங்கள் நிறைவடைவதற்கு முன்பே கட்டிடங்களின் பகுதிகள் இடிந்து விழுந்தன.

விமான நிலைய திட்டம் ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது மற்றும் விசாரணையில் ஒரு 12’க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு சீன நிறுவனம் லஞ்சம் வழங்கியது கண்டறியப்பட்டது. இவர்களில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0