எல்லையில் ஆக்கிரமிப்பு..! ஆய்வுக்குச் சென்ற எதிர்க்கட்சி மீது சீனர்கள் குண்டு வீச்சு..! மௌனம் காக்கும் நேபாள அரசு..!

Author: Sekar
12 October 2020, 6:41 pm
China_Nepal_UpdateNews360
Quick Share

நேபாள நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஹம்லா மாவட்டத்தின் நம்கா பகுதியில் உள்ள சீன எல்லையில் ஆய்வு மேற்கொண்ட நேபாள காங்கிரஸ் கட்சிக் குழு மீது சீன பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக அறிக்கை வெளியாகி, நேபாள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, நம்கா கிராமப்புற நகராட்சியில் எல்லைத் தூணின் கண்காணிப்பின் போது ஜீவன் பகதூர் ஷாஹி தலைமையிலான நேபாளி காங்கிரஸ் குழு மீது சீன வீரர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

மற்ற எல்லைத் தூண்களைக் கண்காணித்து அணி திரும்பிக்கொண்டிருந்தபோது தூண் எண் 9 அருகே கண்ணீர்ப்புகை வீசப்பட்டது.

நேபாள நாட்டின் அனுமதியோ ஒப்புதலோ இல்லாமல், நேபாள எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீனா ஒன்பது கட்டிடங்களை கட்டியதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. ஆனால் இந்த பிரச்சினையில் எதுவும் பேச வேண்டாம் என்று ஆளும் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் அரசு முடிவு செய்தது.

உள்ளூர் கிராம சபையின் தலைவர் விஷ்ணு பகதூர் லாமா இந்த பகுதிக்குச் சென்றபோது இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. லாப்சா கிராமத்தின் லிமி கிராமத்தில் சீன வீரர்கள் கட்டிட கட்டுமான பணிகளை முடித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். கட்டுமானம் நடந்த கிராமத்தின் பக்கத்திற்குச் அவர் செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை.

அவர் சீனப் படைகளுடன் பேச முயன்றார். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும் அவர் திரும்பிச் செல்லும்படி கூட கூறப்பட்டதாக லாமா கூறுகிறார். இப்பகுதியில் நுழைவதற்கு மறுத்த பின்னர், அவர் தனது மொபைல் தொலைபேசியில் சீன ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் சில படங்களை எடுத்தார். இது நேபாள எல்லைக்குள் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தொலைவில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மௌனம் எதிர்கட்சிகளை உலுக்கியது. இதையடுத்து நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்யச் சென்ற நேபாளி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை சீன வீரர்கள் கண்ணீர் புகைக் குண்டு வீசி தாக்குதல் நடத்தியும், நேபாள அரசு தொடர்ந்து மௌனம் காக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் நேபாள மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், விரைவில் நேபாளத்தில் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 56

0

0