ரஷ்யா தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு : உக்ரைன் அரசு அறிவிப்பு…

Author: kavin kumar
28 February 2022, 10:00 pm
Quick Share

வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பெலாரஸ் எல்லையில் இன்று இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா போரை முதலில் நிறுத்திவிட்டு, உக்ரைனில் உள்ள ரஷ்யா படைகளை திரும்ப பெற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் ரஷ்யா தரப்பில் தனது நிபந்தனையை முன்வைத்தது.இதனிடையே, உக்ரைன், கார்கிவ் பகுதியில் ரஷ்யா படைகளின் தாக்குதலில் 16 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் இறந்தததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என தெரிவித்தார். சிறப்பு அனுமதியுடன் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1107

0

0