ரஷ்ய படைகள் நிபந்தனை இன்றி வெளியேற வேண்டும் : உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

Author: kavin kumar
28 February 2022, 10:54 pm
Quick Share

ரஷ்ய படைகள் நிபந்தனை இன்றி உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமென உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

உக்ரைன் மீது தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதம் தெரிவித்தன. அதன்படி, பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் குழு பெலாரஸ் சென்றடைந்தது.

இதனைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பெலாரஸில் ரஷ்யா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும், கிவ் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தில் பெரும் படைகள் 30 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு உள்ளது,’ என தெரிவித்தனர்.

Views: - 964

0

0