எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரமே!!… – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Author: Aarthi
8 October 2020, 11:13 am
trump corona - updatenews360
Quick Share

வாஷிங்டன்: எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே பார்க்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிபர் ட்ரம்புக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 4 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். மேலும் தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், விரைவில் பிரசார பாதைக்கு திரும்புவேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நலம் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் ட்ரம்ப் பேசியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ புதன்கிழமையன்று பதிவு செய்யப்பட்டதாக ட்ரம்பின் தலைமை பணியாளர் மார்க் மெடோஸ் தெரிவித்துள்ளார்.

Views: - 107

0

0