நேபாள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி..!!

By: Aarthi
11 October 2020, 5:42 pm
yogesh bathu - updatenews360
Quick Share

காத்மாண்டு: நேபாள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளாம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடு என கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகேஷ் பத்தராய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கே கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தனது சமூக வலைதள பக்கத்தில் யோகேஷ் பத்தராய் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்தன. இதனால், காத்மாண்டுக்கு வெளியே பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன்.

அந்த சமயத்தில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வாரத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளர்.

Views: - 42

0

0