அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் பலி…!!

28 November 2020, 3:16 pm
corona-death-updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில், உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ பல்கலை கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில்,

அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர். அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், டிசம்பர் மத்தியில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3 லட்சம் கடந்து செல்லும் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தனது கணிப்பில் தெரிவித்து உள்ளது. இதேபோன்று அமெரிக்காவில் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்புகளால் 5 லட்சத்து 11 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

விடுமுறை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஒன்று கூடுவோரால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்து உள்ளனர். மேலும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0