ரஷ்யாவில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த கொரோனா: மீண்டும் லாக்டவுன்…தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 4:17 pm
Quick Share

மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவும் எண்ணிக்கையும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு ரஷ்யாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தபோதிலும் ரஷ்யாவில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணிகள் செய்யவும், தடை செய்யப்பட்டுள்ளது.

Views: - 874

0

0