பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா : மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்ட பிரதமர்!!

18 July 2021, 6:36 pm
Borris Jhonson - Updatenews360
Quick Share

இங்கிலாந்து : பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது, பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன் காரணத்தால் பிரிட்டன் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் இருவரும் பணியில் இல்லாதபோது தனிமைபடுத்தி கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர்

Views: - 185

0

0