3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘கொரோனாவேக்’ தடுப்பூசி: சீன அரசு அனுமதி..!!

7 June 2021, 2:20 pm
Quick Share

பீஜிங்: 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.

சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு சீன நிறுவனமான சைனோவேக் நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கொரோனாவேக் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாகப் பயன்படுத்த இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடுப்பூசியை எந்த வயதினரிடமிருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona_Vaccine_India_UpdateNews360

இந்நிலையில், சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில், கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3-17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்து உள்ளது. அதில் இந்த தடுப்பூசி நம்பகமானது, செயல்திறன் மிக்கது என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக் மற்றும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 193

0

0