வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 1,631-ஆக அதிகரிப்பு

15 February 2020, 12:55 pm
Coronavirus outbreak All eyes on WHO's emergency meet today on declaring global health crisis
Quick Share

சீனா : கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,631 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் வுஹான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

அதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சீனாவில் 143 பேர் உயிரிழந்தனர். அதுவும், ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேராகும். இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 1,631 -ஐ தொட்டுள்ளது. இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது சீன மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதவிர கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 67,535 பேருக்கு உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply