ஜெர்மனியில் டிச.,20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : அதிபர் மெர்கல் அறிவிப்பு

26 November 2020, 2:20 pm
Anjela_merkel_Updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளால் ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளை கொலைநடுங்கச் செய்து வரும் கொரோனாவுக்கு இதுவரையில் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் ஐரோப்பா நாடுகளே முன்னணியில் இருக்கின்றன. அதில், குறிப்பாக, ஜெர்மனியில் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் மேற்கொண்டார். இருப்பினும், 2ம் அலை பாதிப்பு அங்கு பரவத் தொடங்கியுள்ளது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர் மெர்கல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, ஜெர்மனியில் டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அவர் அறிவித்தார். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறையும் போது மட்டுமே ஜனவரிக்கு முன்னதாக சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும் எனக் கூறினார்.

Views: - 18

0

0