“வாயை மூடிக்கொண்டு இல்லாவிட்டால் காணாமல் போவாய்”..! வைராலஜி நிபுணரை மிரட்டிய சீன அதிகாரிகள்..!

14 September 2020, 12:07 pm
Virologist_Li_Meng_Yan_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்று வுஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான விஞ்ஞான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் ஒருவர் வீடியோ நேர்காணலில் கூறியுள்ளார்.

டாக்டர் லி-மெங் யான் எனும் சீன பெண் விஞ்ஞானி, கொரோனா வைரஸ் தொற்றைப் பற்றி கடந்த ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வந்தார். கொரோனா வைரஸ் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அவர் கண்டபோது, அவர் ஹாங்காங் பொது சுகாதார பள்ளியில் பணிபுரிந்தார்.

வுஹானில் நிமோனியா குறித்த தனது விசாரணையின் போது, கொரோனா வைரஸைப் பற்றித் தெரிந்துகொண்டதாகவும், கொரோனா வைரஸ் பதிவாகியபோது உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார். உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் அவரது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர்.

யான், ஒரு வீடியோ நேர்காணலில், இந்த வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும், அந்த குறிப்பிட்ட ஆய்வகம் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

வுஹானில் வெட் சந்தையில் இருந்து உருவாகும் கொரோனா வைரஸின் காரணம் வெறுமனே ஒரு மூடிமறைக்கும் செயல் என்றும் அவர் வலியுறுத்தினார். “சீனாவில் உள்ள நோய்த்தடுப்பு மையத்திலிருந்தும், உள்ளூர் மருத்துவர்களிடமிருந்தும் தனக்கு தகவல் கிடைத்ததால், அது குறித்து உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

மனிதனிலிருந்து மனிதனுக்கு கொரோனா பரவுவது குறித்து ஏற்கனவே சீன அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும், கொரோனா ஒரு உயர் பாதிப்பு வைரஸ் என்றும், இதை யாரும் கட்டுப்படுத்தாவிட்டால் வெடித்து மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த தொற்றுநோயின் அபாயங்கள் குறித்து உலகுக்கு எச்சரிக்க முயன்றபோது சீன அதிகாரிகள் தன்னை மௌனமாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். “கொரோனா குறித்த உண்மைகளை உலகுக்கு அறிவித்து சீன அரசு சார்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். ஆனால் அவர்களோ என்னை வாயை மூடிக்கொண்டு இருக்கும்படியும் இல்லையென்றால் காணாமல் ஆக்கப்படுவாய் என எச்சரித்தனர்.” என பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

சீன அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பின்னர் தான் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல வேண்டியதாக யான் கூறினார். தன்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கும், அவரது அனைத்து தகவல்களையும் நீக்குவதற்கும் சீன அதிகாரிகள் ஆட்களை நியமிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விசில் ப்ளோவர் என்று முத்திரை குத்தப்பட்ட பின்னர் தனது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் யான் இப்போது அமெரிக்காவில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி இயக்குநரான யுவான் ஜிமிங் முன்பு இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்களை சீன அதிகாரிகள் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0